தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் பிப்ரவரி 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் இந்த முகாம் நடக்கும். 1 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கும், 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதன் மூலம் இரத்த சோகை தடுக்கப்பட்டு, குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளும், ஒரு லட்சத்து 90 ஆயிரம் பெண்களும் இந்த முகாமால் பயனடைவார்கள் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.