பாபநாசம்: சட்ட விரோதமாக வாக்களித்த வெளிநாட்டு பெண் கைது

1பார்த்தது
பாபநாசம்: சட்ட விரோதமாக வாக்களித்த வெளிநாட்டு பெண் கைது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையைச் சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற மும்தாஜ் பேகம் (51) என்பவர், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், மீண்டும் சிங்கப்பூர் செல்வதற்காகத் திருச்சி விமான நிலையம் சென்றபோது அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த முறைகேடு கண்டறியப்பட்டது. இது குறித்து திருச்சி விமான நிலைய அதிகாரி அளித்த புகாரின் பேரில், பாபநாசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி