பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் ஜூன் 4-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அய்யம்பேட்டை, கபிஸ்தலம், பாபநாசம், மெலட்டூர், சாலியமங்கலம், அம்மாப்பேட்டை ஆகிய சரகங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அந்தந்த சரகங்களுக்குரிய நாட்களில் தங்களின் கோரிக்கை மனுக்களை இ-சேவை மையம், முதல்வரின் முகவரி இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அளித்து பயனடையலாம் என தாசில்தார் சந்தனவேல் தெரிவித்துள்ளார்.