தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வீட்டு உபயோக பொருட்கள் கடை உரிமையாளர் ஒருவர், வாட்ஸ்அப்பில் வந்த ஆன்லைன் ஆர்டிஓ சலான் டிராபிக் ஃபைன் என்ற போலி இணைப்பை கிளிக் செய்ததால், அவரது மூன்று வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 11 லட்சத்து 71 ஆயிரத்து 301 ஒரே நாளில் இணையவழி மோசடி கும்பலால் திருடப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் மோசடி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.