கல்லணை மேம்பாலம் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
கல்லணையில் சுமார் ரூ. 93 கோடியில் தஞ்சை திருச்சி மாவட்டம் மக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளே ஆகின்ற நிலையில் பாலத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலத்தில் உள்ள கம்பிகள் தெரியும் நிலையில் உள்ளது. இதே நிலை நீடித்தால் பாலம் உடைந்து விழும். இதற்கு
முன்பே அந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தை தார் சாலை அமைத்து மூடியதுடன் மேலும் சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது அதன் அருகிலேயே மிகப்பெரிய 2 பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அந்தப் பாலம் மேலும் வலுவிழந்துவிடும் நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்து மக்கள் முறையாக பயன்படுத்த வழி வகை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.