பூதலுார் அருகே வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் மே 8-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பூதலுார், செல்லப்பன்பேட்டை, புதுக்குடி, இந்தளூர், சோழகம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளார்.