தஞ்சை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
தஞ்சை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய அரசியலமைப்பின் தந்தை புரட்சிகர் அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பனந்தாள் கடைவீதியில் மாவட்டச் செயலாளர் க.செ. முல்லைவளவன் தலைமையில் நடைபெற்றது. அமித்ஷாவை பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். 

பின்னர் அமித்ஷாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் முன்னாள் மண்டலச் செயலாளர் சா. விவேகானந்தன், மாநில பொறுப்பாளர்கள் அரசாங்கம் அண்ணாதுரை, சிற்றரசு, ஆற்றலரசு, செல்வராசு, முருகதாஸ், வெண்மணி, சுப்பிரமணியன், தமிழருவி, செல்வம், சந்திரசேகரன், பன்னீர்செல்வம், பாலகுரு, ஒன்றியச் செயலாளர்கள் காசிதமிழ், முருகப்பன், பரிதிவளவன், போழகுடி சசிகுமார், நகரச் செயலாளர் குட்டிகுமார் மற்றும் நிர்வாகிகள் சுதாகர், கலியமூர்த்தி, அச்சுதன், முகில், குறிச்சி சங்கதமிழன், தமிழன், ஷாபீருள்ளா, சையத் அலி, வழக்குணசீலன், தளபதி, சுரேஷ், நெய்வாசல், அன்பு, நர்குணன், புத்தூர் எம்.கே.மணி, அரசு, ஆடுதுறை சுரேஷ், கார்த்தி, கேட்ரிங்முருகன், ஞானசேகரன் மற்றும் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி