பொதுமக்கள் கவனம், பிறப்பு சான்றிதழ்... முக்கிய அறிவிப்பு

331பார்த்தது
பொதுமக்கள் கவனம், பிறப்பு சான்றிதழ்... முக்கிய அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 26.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 01.01.2000-க்கு முன் பிறந்தவர்கள் மற்றும் 15 ஆண்டுகள் கடந்தும் பெயர் பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். இனி வரும் காலங்களில் கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என இந்திய தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார். கல்விச் சான்றிதழ் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.

தொடர்புடைய செய்தி