தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே வளப்பக்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சசிக்குமார், இன்று காலை காவேரி ஆற்றுப் படித்துறைக்குச் சென்றபோது வெறிநாயால் கொடூரமாகக் கடிக்கப்பட்டார். பார்வை குறைபாடுடைய தூய்மைப் பணியாளர்களின் மகனான இவரை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் துரத்தி கடித்தது. படுகாயமடைந்த சிறுவன் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.