பள்ளி மாணவி தற்கொலை

2பார்த்தது
பள்ளி மாணவி தற்கொலை
திருக்காட்டுப்பள்ளி அருகே நடுபடுகை வளர்ப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகள் பிரியா (16), திருக்காட்டுப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். தீராத வயிற்று வலியால் மனமுடைந்த அவர், விஷ மருந்து குடித்து மயக்கமடைந்தார். உடனடியாக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பிரியாவின் தந்தை தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி