திருவையாறு அருகே கண்டியூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பழங்குடியினருக்கான தொல்குடி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் முருககுமார் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அனிதா, மண்டல துணை தாசில்தார் ராஜகுமார், குடிமைப் பொருள் வழங்கல் துணை தாசில்தார் தீபா, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்மோகன், சதீஷ் மற்றும் கிராம உதவியாளர்கள், பழங்குடியினர் கலந்து கொண்டனர்.