உறுப்பு தானம் செய்யப்பட்ட இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை

1பார்த்தது
உறுப்பு தானம் செய்யப்பட்ட இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை
சென்னை: திருவையாறு அருகே வளப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது அபிநாத், சென்னையில் வேலை தேடிச் சென்றபோது சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நவம்பர் 1-ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. பெற்றோரின் ஒப்புதலுடன் அபிநாத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது உடல் வளப்பக்குடிக்கு கொண்டு வரப்பட்டு, தஞ்சாவூர் கோட்டாட்சியர், திருவையாறு வட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி