தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மார்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்காக, அய்யாசாமிபட்டி பகுதியில் இன்று பூமி பூஜை நடைபெற்றது. மத்திய மாவட்டச் செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வைத் தொடர்ந்து, விழா திடல் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தக் கூட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து காவல்துறை கேட்டுள்ள 32 கேள்விகளுக்கு த.வெ.க. சார்பில் இன்று பதிலளிக்கப்பட உள்ளது. கூட்டத்திற்கான அனுமதி குறித்த காவல்துறையின் முடிவு இன்று மாலை தெரியவரும்.