தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (30), தனது காதலியும் அரசு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியை காவியா (26) என்பவரை நவம்பர் 27ஆம் தேதி கத்தியால் குத்திக் கொலை செய்தார். அம்மாபேட்டை போலீசார் அவரை கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அஜித் குமார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். சிறைக் காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.