தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (ஜன.4) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், கியூஆர் கோடு அனுமதி அட்டையுடன் வந்தவர்கள் மட்டுமே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அனுமதி அட்டை இல்லாத தொண்டர்கள் விஜய்யை காணும் ஆவலில் கூட்ட அரங்கிற்கு வெளியே அங்கும் இங்கும் ஓடினர்.