தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனதாக செந்தில்குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜனவரி 7ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் இந்த மோட்டார் சைக்கிள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.