தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில், மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ மற்றும் ச. முரசொலி எம். பி ஆகியோர் கொடியசைத்து பந்தயத்தைத் தொடங்கி வைத்தனர். இதில் 16 பெரிய மாடு, 16 சிறிய மாடு, 46 பெரிய குதிரை, 16 சிறிய குதிரை எனப் பிரிவுகளில் ஓட்டங்கள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு முறையே 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.