திருக்காட்டுப்பள்ளி: புறவழிச்சாலை, உயர்மட்ட பாலம் பூமிபூஜை

2பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி: புறவழிச்சாலை, உயர்மட்ட பாலம் பூமிபூஜை
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் ரூ. 52.45 கோடியில் புறவழிச்சாலை மற்றும் வெண்ணாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளுக்கு நேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அடிக்கல் நாட்டினார். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 3 கி.மீ. நீள, 12 மீ. அகல புறவழிச்சாலைக்கு ரூ. 22.60 கோடியும், வெண்ணாற்றின் மீது 16 தூண்களுடன் 265 மீ. நீள, 12 மீ. அகல உயர்மட்ட பாலம் கட்ட ரூ. 29.85 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.