திருக்காட்டுப்பள்ளி: விஷம் குடித்து பலியான வாலிபர்

793பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி: விஷம் குடித்து பலியான வாலிபர்
மேலத்திருப்பந்துருத்தியைச் சேர்ந்த பாலமுருகன் (29) மதுப்பழக்கம் மற்றும் வேலைக்குச் செல்லாததால் குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளார். சென்னையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், மே 17-ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மாயமானார். நேற்று முன்தினம் (மே 19) திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் வடகரையில் விஷம் குடித்து பிணமாகக் கிடந்த பாலமுருகன் சடலத்தை காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி