திருவையாறு அவ்வை மழலையர் தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலியபெருமாள் தலைமையில் விளையாட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை கோகிலா வரவேற்றார். அவ்வை அறக்கட்டளை செயலர் முகில்வேந்தன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் விடுதலை வேந்தன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதிக புள்ளிகள் பெற்ற மாணவருக்கு கலையருவி கோப்பை வழங்கினார். தாளாளர் கண்ணகி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.