திருவையாறு: வாழைப்பயிர் சேதம், இழப்பீடு வழங்க அமைச்சர் உறுதி

7பார்த்தது
திருவையாறு: வாழைப்பயிர் சேதம், இழப்பீடு வழங்க அமைச்சர் உறுதி
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் திருவையாறு பகுதிகளில் சூறாவளி காற்றால் சுமார் 822 ஹெக்டேர் பரப்பளவிலான வாழைகள் சேதமடைந்துள்ளன. ஓல தேவராயன்பேட்டை பகுதியில் சேதமடைந்த தோட்டங்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அ. மு. ஷாஜகான் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. ரேவதி முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கணக்கெடுப்பு முடிந்ததும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் காப்பீட்டுத் தொகையும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி