திருக்காட்டுப்பள்ளியில் கலைஞர் சிலையை திறந்தார் உதயநிதி

4பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் கலைஞர் சிலையை திறந்தார் உதயநிதி
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருக்கு திருவாரூர் தேர் மாதிரி, செங்கோல், வெள்ளி வீரவாள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சாவூர் எம். பி. ச. முரசொலி, திருவையாறு எம். எல். ஏ. துரை. சந்திரசேகரன், மேயர் ராமநாதன், முன்னாள் எம். பி. பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தி. மு. க. பூதலுார் ஒன்றிய செயலாளர் முருகானந்தம் பேரனுக்கு தமிழ்செல்வன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

தொடர்புடைய செய்தி