திருக்கானூர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம்

58பார்த்தது
திருக்கானூர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருக்கானூர் கரும்பேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 

திருக்கானூர் சௌந்தர்யநாயகி உடனமர் கரும்பேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆகும். இக்கோயிலில் குடமுழுக்கு தினத்தை முன்னிட்டு வருடாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காவிரி நீர் நிரப்பி கடங்கள் அமைத்து சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் செய்து பூர்ணாஹுதி நடைபெற்றது. சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கடதீர்த்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து சௌந்தர்யநாயகி கரும்பேஸ்வரருக்கு (உற்சவர்) திருக்கல்யாண வைபவத்தை அரியூர் சிவாகம விற்பன்னர் முத்துக்குமாரசிவம் தலைமையில் செம்மேனிநாத சிவாசாரியார், விவேகானந்தசிவம் உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர். சுல்யாண விருந்து அனைவருக்கும் அளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி