தஞ்சாவூர் பெரிய கோயிலில் திருடிய பெண் கைது

50பார்த்தது
தஞ்சாவூர் பெரிய கோயிலில் திருடிய பெண் கைது
தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள 11 உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. இப்பணியில் வங்கி ஊழியர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர். இந்த எண்ணிக்கையில் ரூ. 41 லட்சத்து 98 ஆயிரத்து 874 ரொக்கம், 18 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது. 

இதனிடையே, எண்ணிக்கை பணி பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அறநிலையத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தபோது, ஒரு பெண் பணத்தை எண்ணும்போது, திருடி மறைத்து வைப்பது தெரிய வந்தது. 

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் கோயில் செயல் அலுவலர் பெ. சத்தியராஜ் புகார் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, மேற்கொண்ட விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சன்னதி தெருவைச் சேர்ந்த போஸ் மனைவி இந்திரா (60) என்பதும், ரூ. 25 ஆயிரத்து 780 -ஐ திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்திராவை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி