தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே புதுச்சத்திரம் கிராமத்தில் உள்ள பூங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பந்தக்கால் நடும் பணியில் ஈடுபட்டிருந்த
அஜித்குமார் (30) மற்றும் கொடியரசு (35) ஆகியோர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். மூங்கில் மரம் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில்
அஜித்குமார் பூதலூர் அரசு மருத்துவமனைக்கும், கொடியரசு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.