
மக்கள் குறை கேட்பும் முகாம்
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் 9 முதல் 15 வார்டுகளுக்கான மக்கள் குறை கேட்பு முகாம் நடைபெற்றது. பூதலூர் வட்ட திட்ட கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை முன்னாள் எம்எல்ஏ துரை சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். முகாமில் பூதலூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் செல்லக்கண்ணு, தாசில்தார் விவேகானந்தன், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் பங்கயற்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மொத்தம் 648 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.
























