
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் தமிழ் புத்தாண்டு படி பூஜை
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று புகழ்பெற்ற படி பூஜை நடைபெற்றது. 60 தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் படிக்கட்டுகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. நிகழாண்டுக்குரிய படிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பன்னிரு திருமுறைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு தங்கக் கவசம், வைரவேல் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.




































