தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையிலான போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம், தஞ்சாவூர் வடக்கு வாசல் ராஜகோரி சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சூர்யா (25), அருண் குமார் (21), மற்றும் சபரீசன் விஸ்வா (22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.94 கிலோ கஞ்சா மற்றும் 400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.