மடிக்கணினியை பறித்த வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

476பார்த்தது
மடிக்கணினியை பறித்த வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
கும்பகோணத்தில் தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி மற்றும் ரொக்கம் பறித்த வழக்கில் மூன்று பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மே 2, 2024 அன்று கணேசன் என்ற ஊழியரைத் தாக்கி கைப்பேசி, மடிக்கணினி, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் பறித்த வழக்கில் விஜய், செந்தில் குமார், ராஜசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ. ராதிகா, குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி