தஞ்சாவூர்: ரூ. 16 லட்சம் ஆட்டைய போட்ட மர்ம ஆசாமி

578பார்த்தது
தஞ்சாவூர்: ரூ. 16 லட்சம் ஆட்டைய போட்ட மர்ம ஆசாமி
கும்பகோணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம், ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி மர்ம நபர்கள் ₹16 லட்சம் மோசடி செய்துள்ளனர். வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட நபர்களை நம்பி, கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை 14 தவணைகளாகப் பணத்தை அனுப்பியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட ஆய்வில் அந்தப் பணம் பல்வேறு மாநில வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
Job Suitcase

Jobs near you