திருவிடைமருதூா் அருகே சாலையைக் கடந்தவா் வாகனம் மோதி பலி

5பார்த்தது
திருவிடைமருதூா் அருகே சாலையைக் கடந்தவா் வாகனம் மோதி பலி
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே இனாம்கிளியூரைச் சோ்ந்த சக்கரவா்த்தி (60) வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சோழன் நகா் மாரியம்மன் கோயில் அருகே நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்குச் சென்ற வாகனம் மோதி உயிரிழந்தாா். இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநா் குணசீலனிடம் (45) விசாரணை நடத்தி வருகிறாா். இறந்தவா் சடலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.