தஞ்சாவூர் அருகே வையாச்சேரி கூட்டுரோட்டில் நேற்று இரவு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பத் (56) சாலை விபத்தில் உயிரிழந்தார். பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையைக் கடந்த நடராசன் (35) மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டது. காயமடைந்த நடராசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சம்பத்திற்கு மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.