இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு. அ. பாரதி மற்றும் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலர் கோ. சக்திவேல் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, புயல் மழை காரணமாக தஞ்சாவூரில் சம்பா, தாளடி இளம் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம், ஆடுகளுக்கு ரூ. 10 ஆயிரம், மாடுகளுக்கு ரூ. 50 ஆயிரம், மற்றும் கும்பகோணம் வட்டம் ஆலமன்குறிச்சி ரேணுகா உயிரிழப்புக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.