ஆபத்தான நிலையில் சோழபுரம் விஏஓ அலுவலக கட்டடம்

37பார்த்தது
ஆபத்தான நிலையில் சோழபுரம் விஏஓ அலுவலக கட்டடம்
கும்பகோணம் அருகே சோழபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், சோழபுரம், மேலானமேடு, ராமானுஜபுரம் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேற்கூரை பூச்சுகள் பெயர்ந்து விழுவதால், மழைக்காலம் தொடங்குவதற்குள் கட்டிடத்தை இடித்துவிட்டுப் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் அல்லது தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி