தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கபடிப் போட்டியில், தமிழ் பல்கலைக்கழக அணி அரை இறுதியில் வெற்றி பெற்று இரண்டாம் பரிசு வென்றது. கையுந்து பந்து போட்டியின் அரையிறுதியில் ஜமால் முகமது கல்லூரியையும், இறுதிப் போட்டியில் குத்தாலம் அரசு கலைக் கல்லூரியையும் வென்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்களை துணைவேந்தர் குழு உறுப்பினர் மருத்துவர் முனைவர் பெ. பாரதஜோதி, பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டினர். பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் செ. பிரபாகரன் உடனிருந்தார்.