வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகளில் ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் நெருக்கடி கொடுப்பதற்கு கண்டனம் தெரிவித்து, பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயதுரை தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், பெண் ஊழியர்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.