கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் 185-ஆம் ஆண்டு தீமிதி பெருவிழா மற்றும் 13-ஆம் ஆண்டு கும்பாபிஷேகப் பூர்த்தி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடந்த சனிக்கிழமை சிறப்பு அபிஷேகத்துடன் விழா தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை திரௌபதி - அர்ஜுனர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மகாபாரத உபன்யாசம் மற்றும் அம்பாளின் வீர சபதம் நிறைவேறியதைத் தொடர்ந்து, அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டது. மாலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.