தஞ்சாவூர்: வடிகட்டிய பொய்யை கூறும் எடப்பாடி: கோவி. செழியன் கடும் தாக்கு

591பார்த்தது
தஞ்சாவூர்: வடிகட்டிய பொய்யை கூறும் எடப்பாடி: கோவி. செழியன் கடும் தாக்கு
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், நெற்பயிர்கள் காய்வதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியது வடிகட்டிய பொய் எனத் தெரிவித்தார். திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் மற்றும் பயிரிடப்பட்ட பரப்பளவில் அபரிமித வளர்ச்சி அடைந்து தஞ்சாவூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளதாக அவர் கூறினார். அதிமுக ஆட்சியில் நெல் கொள்முதல் மற்றும் பயிரிடப்பட்ட பரப்பளவுடன் ஒப்பிடும்போது திமுக அரசு சாதனை படைத்துள்ளதாகவும், விவசாயிகளை ஏமாற்ற முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி