தட்டுப்பாடின்றி வேளாண் கருவிகளை வழங்க விவசாயிகள் கோரிக்கை

1பார்த்தது
தட்டுப்பாடின்றி வேளாண் கருவிகளை வழங்க விவசாயிகள் கோரிக்கை
கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக வேளாண் கருவிகள் பற்றாக்குறையின்றி வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருபுவனம் வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர், உழவு இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட்டாலும், அரசு இயந்திரங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், விவசாயிகள் தனியார் நிறுவனங்களிடம் அதிக வாடகை கொடுத்து கருவிகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, வேளாண் பொறியியல் துறைக்கு கூடுதல் கருவிகளை ஒதுக்கீடு செய்து, தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி