நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

305பார்த்தது
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருவிடைமருதூர் அருகே கூத்தனூர் கிராமத்தில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஆர். சுகுமார் உள்ளிட்டோர் மனு அளித்தனர். நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி