காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடிக்கான பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 15 வரை காலக்கெடுவை நீட்டித்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.