சுவாமிமலை கோயிலில் நவ. 25-ல் (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம்

2பார்த்தது
சுவாமிமலை கோயிலில் நவ. 25-ல் (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம்
கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை திருவிழா இந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றம், விநாயகர், வள்ளி-தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவாரங்களுடன் உற்சவ மண்டபத்துக்கு எழுந்தருளல், இரவு யாக சாலை பூஜை, சுவாமி வீதியுலா நடைபெறும். பிரதான விழாவான தேரோட்டம் திருக்கார்த்திகை நாளான டிசம்பர் 3-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் நடைபெறும். இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா மற்றும் தீபக்காட்சி நடைபெறும். அறநிலையத்துறை துணை ஆணையர் தா. உமாதேவி, தக்கார் டி.ஆர். சுவாமிநாதன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி