திருவிடைமருதூர் அருகே அரசு பேருந்து -டிராக்டர் மோதி விபத்து

2பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்து, டிப்பர் லாரியின் சக்கரத்தில் மோதி, அதே நேரத்தில் ஆடுதுறை நோக்கி வந்த மற்றொரு அரசு நகர பேருந்திலும் மோதியதில் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 11 பயணிகள் காயமடைந்து திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பிரேக் போட்டால் சாலை வழுக்குவதாகவும் ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் அரசு பேருந்து மரத்தில் மோதி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி