தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான கோவி.செழியன் நான்காவது முறையாக வெற்றி பெற்றார். அவர் 79,307 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். இவருக்கு அடுத்தபடியாக தவெக சார்பில் போட்டியிட்ட எஸ். பிரபாகரன் 65,670 வாக்குகள் பெற்றார்.