தஞ்சையில் இந்திய நவீனக் கல்வி வரலாற்றுக் கண்காட்சி திறப்பு

4பார்த்தது
தஞ்சையில் இந்திய நவீனக் கல்வி வரலாற்றுக் கண்காட்சி திறப்பு
தஞ்சாவூரில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாடு டிசம்பர் 4 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து "இந்திய நவீனக் கல்வி வரலாற்றுக் கண்காட்சி"யை மாநகராட்சி பூங்காவில் புதன்கிழமை காலை கொட்டும் மழையிலும் நடத்தினர். தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி கண்காட்சியை திறந்து வைத்தார். தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா கருத்துரையாற்றினார். விவசாயிகள் சங்கம், சிறுபான்மை மக்கள் நலக்குழு, சிபிஎம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி