தஞ்சை: பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

60பார்த்தது
தஞ்சை: பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகேயுள்ள கீழக்காட்டூர் பிரதான சாலையில் வசிப்பவர் சந்திரசேகர் மனைவி உஷாராணி (61). சந்திரசேகர் இறந்துவிட்டார். மகள் திருமணமாகி மணப்பாறையில் உள்ளார். உஷாராணி மகளைப் பார்ப்பதற்குப் பிப்ரவரி 24-இல் வெளியூர் சென்றார். 

பின்னர் மார்ச் 17-இல் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்றபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த வெள்ளி மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. புகாரின்பேரில், பந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.58,800 ஆகும்.

தொடர்புடைய செய்தி