கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தி, அங்குள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், நிர்வாக வசதிக்காக உடனடியாக மாவட்ட அறிவிப்பை வெளியிடக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.