தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதி எஸ். புதூா் கிராமத்திற்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 6. 30, மாலை 16. 15 மணிக்கு ஆடுதுறை - சாத்தனூா் வழியாக எஸ். புதூா் வரை நான்கு நடைகள் வழித்தட மாற்றம் செய்து பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா். இந்த நிகழ்வில் முன்னாள் எம். பி. செ. இராமலிங்கம், பேரூா் திமுக செயலா் கோசி. இளங்கோவன், பேரூராட்சி தலைவா் சுந்தரஜெயபால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளா் (வணிகம்) எஸ். தங்கபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.