கும்பகோணம் அருகே உள்ள டாக்டர் ஜி. எஸ். கல்யாணசுந்தரம் நினைவு பள்ளியில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை எம்யூஎன் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக காளி குழும தலைவர் கிரிதரன் காசி ராமநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பொது அவை, பன்னாட்டு வளர்ச்சி அமைப்பு, பன்னாட்டு அமைதி குழு போன்ற குழு அமைப்புகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் போன்று பல்வேறு விவாதங்களை நடத்தினர்.
சமூக அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற தஞ்சையை சுற்றியுள்ள பள்ளிகளில் இருந்து சுமார் 175 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள் பரமகுரு, பாலாஜி, பழைய கூடலூர் டாக்டர் ஜி. எஸ். கே. மெட்ரிக் பள்ளியின் முதல்வர் கணேசன், எம்யுஎன் ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.