திருவிடைமருதூர் வட்டம் வண்ணக்குடி புத்தகரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று திறந்து வைத்தார். இதுவரை 28,224 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் மினி ஸ்டேடியம் கட்டும் பணி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், இது குறித்து சிலர் விஷம பிரச்சாரம் செய்வதாகவும் அமைச்சர் கூறினார்.